Wednesday, May 16, 2012

அணுவிஞ்ஞானி கொலை: மொஸாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றம்!


Majid Jamali Fashi, the main suspect in the assassination of the nuclear scientist Masoud Ali Mohammadi, speaks during his trial at Tehran's Revolutionary Court
டெஹ்ரான்:மூத்த ஈரான் அணு விஞ்ஞானியைக் கொலைச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மொஸாத் ஏஜண்ட் மாஜித் ஜமலி ஃபாஷிக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனை தலைநகர் டெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈரான் அணு விஞ்ஞானி மஸூத் அலி முஹம்மதியை கொலைச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபாஷி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மரணத்தண்டனை விதித்தது.
ஃபாஷிக்கு, இஸ்ரேலில் வைத்து மொஸாதின் பயிற்சியும், ஈரான் அணு விஞ்ஞானியைக் கொலைச் செய்ய 1,20,000 டாலரும் வழங்கப்பட்டதாக விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அஸர்பைஜானில் ஹைதர் அலியேவ் விமானநிலையத்தில் இருந்து டெல் அவீவிற்கு செல்ல போலி ஆவணத்தை தயாரித்ததை ஃபாஷி ஒப்புக்கொண்டார்.
போதைப்பொருளை கைவசம் வைத்திருந்தது தொடர்பாகவும் இவர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.
டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஈரான் அணு விஞ்ஞானி அலி முஹம்மதி, டெஹ்ரானில் தனது வீட்டிற்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கொலைச் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment