
டெல்அவீவ்:2009-ஆம் ஆண்டு காஸ்ஸா தாக்குதல்களின் போது ஃபலஸ்தீன் குடும்பத்தில் 21 பேரை கொடூரமாக கூட்டுப் படுகொலைச் செய்த இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையை குறித்த விசாரணையை இஸ்ரேல் முடித்துவிட்டது. கூட்டுப் படுகொலை போர் குற்றம் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி இஸ்ரேல் ராணுவம் இம்முடிவை எடுத்துள்ளது.
ஸைத்தூன் கூட்டுப் படுகொலை என அழைக்கப்படும் இச்சம்பவத்தில் ஃபலஸ்தீனில் முக்கிய பழங்குடி இனமான ஸமவ்னி குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் இஸ்ரேலின் கொடூரத்திற்கு பலியானார்கள்.
சிவிலியன்களை வேண்டுமென்றே கொலைச் செய்வதற்காக இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தவில்லை என்றும், இதற்கு மாற்றமான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்றும் கூறி இஸ்ரேல் ராணுவ அட்வக்கேட் ஜெனரல் விசாரணையை முடித்துள்ளார்.
தாக்குதல் நடக்கும் பொழுது சிவிலியன்கள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று சிவிலியன்களை தடைச் செய்த ராணுவம் பின்னர் சிவிலியன்கள் வசிக்கும் வீடுகள் மீது குண்டை வீசியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை சுட்டிக்காட்டி இஸ்ரேல் மனித உரிமை அமைப்பான பத்ஸலேம் நீதிமன்றத்தை அணுகியது. விசாரணையை முடித்துக்கொண்ட நடவடிக்கையை அங்கீகரிக்க இயலாது. ராணுவத்தின் உத்தரவின்படி வீடுகளில் வசித்தவர்களை கொலைச் செய்த சம்பவத்தில் ஒருவர் கூட தண்டிக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று பத்ஸலேம் தலைவர் யேல் ஸ்டெய்ன் கூறுகிறார்.
இஸ்ரேல் தாக்குதலைக் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா கமிஷன் ஸைத்தூன் கூட்டுப் படுகொலையை கொடூரமானது என்று வர்ணித்தது.
No comments:
Post a Comment