Wednesday, May 23, 2012

ஏமன் ராணுவ பரேடில் குண்டு வெடிப்பு – 96 பேர் பலி


kills nearly 100military paradeSuicide BomberYemen
ஸனா:ஏமனின் தலைநகரில் கடந்த திங்கள் அன்று ராணுவ பரேட் ஒத்திகையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 96  ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 300_க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
ஏமனின் தலைநகரில் நடந்துள்ள இந்த தாக்குதலில் 63 வீரர்கள் பலியாகியுள்ளதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் பி.பி.சி தொலைக்காட்சி இறந்தவர்களின் எண்ணிக்கை 96  இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஏமன் தேசம் உருவாகி 22-ம் ஆண்டு பூர்த்தியாவதையொட்டி ராணுவ அணிவகுப்பிற்கான ஒத்திகை நடைபெற்று இருந்த நிலையில் ராணுவ சீருடையில் வந்த நபர் ராணுவ அணிவகுப்பு ஓத்திகையினுள் புகுந்து தனது உடலில் வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரியில் ஏமன் அதிபராக அப்த்-ரப்புஹ் மன்சூர் பதவி ஏற்ற முதல் நடைபெறும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும். மேலும் இத்தாக்குதல் ஏமனின் தலைநகரில் அதிபரின் மாளிகை அருகே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குண்டு வெடிப்பை தொடர்ந்து அவ்விடத்தில் ராணுவ வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்ததாக குண்டு வெடிப்பை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment