Friday, May 4, 2012

ஜுன் 30-ஆம் தேதிக்குள் சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைப்போம் – எகிப்து ராணுவம்!


Mohammed al-Assar
கெய்ரோ:எகிப்தில் சிவிலியன் அரசிடம் அடுத்த மாதம்(ஜூன்) 30-ஆம் தேதிக்குள் ஆட்சியை ஒப்படைப்போம் என்று ராணுவ அரசு அறிவித்துள்ளது.
சிவிலியன் அரசுக்கு ஆட்சியை உடனடியாக ஒப்படைக்கக் கோரி ராணுவத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வரும் வேளையில் ராணுவ தலைவர் ஜெனரல் முஹம்மது அல் அஸர் இதனை அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணுவ அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் மரணித்தனர். இச்சம்பவம் குறித்து முஹம்மது அல் அஸர் வருத்தம் தெரிவித்தார்.
தேர்தல் முற்றிலும் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்தப்படும். தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதிபர் தேர்தல் இம்மாதம் 23-24 தேதிகளில் நடைபெறும் என்று அஸர் கூறினார்.

No comments:

Post a Comment