Friday, May 18, 2012

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை: தீர்ப்புக்காக காத்திருக்கும் 1 லட்சம் வழக்குகள்!


புதுடெல்லி:இந்தியாவில் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. இத்தகவலை சமூகநீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இத்தகைய வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த தற்போதைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
1989-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தொடர்புடைய மாநிலங்களின் கருத்துக்களை ஆராய அம்மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 19,939 வழக்குகளும், மத்திய பிரதேச மாநிலத்தில் 13,590 வழக்குகளும் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளன. ராஜஸ்தானில் 11,524 வழக்குகள், குஜராத்தில் 9,437 வழக்குகள் ஆகியன தீர்ப்புக்காக குவிந்துள்ளன என்று தெரிவித்த முகுல் வாஸ்னிக், சட்டத் திருத்தங்கள் குறித்து விளக்கமாக தெரிவிக்கவில்லை.
ஆறு மாநிலங்கள் தங்கள் பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment