Thursday, April 26, 2012

உணவு இல்லை:ஆப்பிரிக்காவில் நிலைமை படுமோசம்!


No food africa
ஐ.நா:பட்டினி தீவிரமடைந்துள்ள ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது.
1.56 கோடி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விலைவாசி உயர்வு பிரதேச மக்களின் வாழ்க்கையை துயரத்தை இரு மடங்காக மாற்றியுள்ளது.
சாட், நைஜர், மாலி, மவுரிட்டானியா, புர்கினா ஃபாஸோ, சோமாலியா ஆகியன மிகவும் நெருக்கடியை சந்திக்கும் ஆப்பிரிக்க நாடுகள் ஆகும்.
ஊட்டச்சத்துக் குறைவினால் ஸாஹல் பகுதியில் மட்டும் 10 லட்சம் குழந்தைகள் மரணத்தோடு போராடுகின்றன. ஆக்‌ஷன் எகைன்ஸ்ட் ஹங்கர், ஆக்ஸ்பார்ம், சேவ் த சில்ட்ரன், வேல்ட் விஷன் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கையிலும் ஆப்பிரிக்க மக்களின் நிலைமை விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உணவு நெருக்கடியை சீர் செய்ய இப்பகுதிகளில் 200 கோடி டாலர் அவசரமாக தேவைப்படுகிறது என்று இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நெருக்கடியை சமாளிக்க தேவையான 75 கோடி டாலர் தொகையில் பாதிக்கு குறைவாகவே நிதி கிடைத்துள்ளது என்று ஐ.நா கூறுகிறது.

No comments:

Post a Comment