Friday, April 20, 2012

த வீக் அலுவலகம் மீது தாக்குதல்:30 சிவசேனா குண்டர்கள் கைது!


Mumbai office of The Week magazine attacked
மும்பை:த வீக் பத்திரிகையின் மும்பை அலுவலகம் மீது சிவசேனா குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 3 பணியாளர்கள் காயமடைந்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக மும்பை நகரசபை சிவசேனா உறுப்பினர் கிஷோரி பெட்னேகர் உள்பட 30 பேரை போலீஸ் கைதுச் செய்தது. சில பணியாளர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான தகராறில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
த வீக் பத்திரிகையின் சர்குலேசன்-மார்க்கெட்டிங் பிரிவில் சிவசேனா உறுப்பினர்கள் உள்பட 38 பணியாளர்கள் கன்சல்டண்ட் மூலமாக பணியாற்றுகின்றனர். கன்சல்டண்ட் மூலமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களை நிரந்தரமாக்க வேண்டும் கோரிக்கை எழுந்தது. இதுத் தொடர்பான வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.
பணியாளர்களில் ஒருவரது பணிக் காலம் முடிந்துவிட்டதாகவும், அவர் நீதிமன்றத்தை அணுகினார் என்றும் த வீக் சீனியர் ஜெனரல் மேனேஜர் ஸ்ரீகுமார் மேனோன் கூறினார். வேலையை விட்டு நீக்கப்பட்ட பணியாளரை மீண்டும் வேலையில் அமர்த்தக்கோரி சிவசேனாக்காரர்கள் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதாக மேனோன் கூறினார்.
காயமடைந்தவர்களில் சர்குலேசன் மேனேஜர் ஜோகி ஸக்காரியாவும் அடங்குவார்.

No comments:

Post a Comment