Wednesday, March 14, 2012

சிரியா எல்லை முழுவதும் கண்ணிவெடிக் குண்டுகள் – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்!


Syria laying landmines along border - Human Rights Watch
டமாஸ்கஸ்:நஸீர் ஸைதோவ் தஜிகிஸ்தானை மையமாக வைத்து இயக்கிய ‘ட்ரு நூன்’ திரைப்படத்தின் காட்சிகளை நினைவுக்கூறும் வகையில் மோதல் சூழல் தீவிரமடைந்துள்ள சிரியாவின் நிலைமைகள் அமைந்துள்ளன.
லெபனான், துருக்கி ஆகிய நாடுகளுடன் எல்லையை பங்கிடும் சிரியாவின் பகுதிகளில் கண்ணிவெடிக்குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கைகள் அங்கு நடந்த மனித குருதிக்கு காரணமாக கண்ணிவெடிகளும் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறது. மோதல் சூழல் நிலவும் பகுதிகளில் உயிரை காப்பாற்றிக்கொள்ள புலன் பெயரும் மக்கள் கடந்து செல்லும் வழிகளில் எல்லாம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. தவறிப்போய் எவரேனும் கண்ணிவெடியில் கால்வைத்தால் அவர்கள் சிதறி சின்னாப்பின்னமாகி விடுவார்கள்.
சிரியா ராணுவத்தின் 28 வயதான முன்னாள் ராணுவ வீரர் மார்ச் துவக்கம் முதல் ஹஸனிய்யா பகுதியில் நீக்கம் செய்த கண்ணிவெடிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 ஆகும்.
லெபனான் எல்லையை கடக்கும் வேளையில் காயமுற்ற ஒரு குடும்பத்திற்கு உதவும்போது 15 வயதான சிறுவனுக்கு  ஒரு கால் இழந்தது. எல்லையை தாண்டுபோது தன்னிடமிருந்து சில அடிகள் தாண்டி கண்டி வெடி வெடித்ததாக அச்சிறுவன் கூறுகிறான்.
மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கண்ணிவெடிகளின் தயாரிப்பும், உபயோகமும் தடை விதிக்கும் 1997-ஆம் ஆண்டு ஒட்டாவோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 159 நாடுகளில் சிரியா உள்படாது. கண்ணிவெடிகள் புதைப்பது உள்பட எல்லையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதமே சிரியா ராணுவம் தீர்மானித்ததாக அரசு செய்தி தொடர்பாளர் கூறுகிறார். தினமும் 200 பேர் சிரியாவில் இருந்து புலன் பெயர்ந்து தங்களின் ஹதாயா முகாமிற்கு வருவதாக அந்த முகாமை நடத்து ரெட் டர்கிஸ் ரெட் க்ரஸெண்ட் கூறுகிறது.
ஒரு வருடமாக சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் உள்பட்ட மக்கள் பலியானதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

No comments:

Post a Comment