Wednesday, March 14, 2012

ஆஃப்கானில் வலுப்பெற்றுவரும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு!


Baqeri_d20120313063211807
காபூல்:புனித திருக்குர்ஆன் பிரதி எரிப்பு சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க ராணுவ வீரன் வெறித்தனமாக பிஞ்சுக் குழந்தைகளையும், பெண்களையும் கொடூரமாக சுட்டுக் கொலைச் செய்த சம்பவமும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு உணர்வு மிகவும் வலுவடைந்துள்ளது.
இதுக்குறித்து ஆப்கானைச் சார்ந்த மக்களின் கருத்துக்கள்:
கடை உரிமையாளர் ஹாஜி நாஜிக்:அமெரிக்கர்களால் எங்களுக்கு எதுவும் பெற முடியவில்லை. வெளிநாட்டு ராணுவத்தினர் எங்களின் வாழ்க்கை, கண்ணியம், தேசம் ஆகியவற்றை சீர்குலைத்துவிட்டனர். அவர்களின் விளக்கமும், மன்னிப்பும் மரணித்தவர்களை திரும்ப கொண்டுவராது. அமெரிக்க ராணுவமே விரைவில் நாட்டைவிட்டு வெளியேறு! எங்களை அமைதியாக வாழவிடு!
19 வயதான பல்கலைக்கழக மாணவர் முஹம்மது ஃபாஹிமும் இதே கருத்தை கூறினார்.
காபூலில் பெயிண்டிங் தொழிலாளியான நஜீபுல்லாஹ்: 2014-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறப் போவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்பொழுதே நாட்டை விட்டு வெளியேறினால் அவ்வளவு நல்லது. தாலிபான்கள் மீண்டும் வருவது எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு உதவ அல்ல, மாறாக கொலைச் செய்யவே அமெரிக்கா ஆப்கானுக்கு வந்துள்ளது. அவர்களை மட்டுமல்ல, அவர்களை விரும்புவர்களையும் நான் வெறுக்கிறேன்.
கர்ஸாய் அரசும் அமெரிக்காவின் கூட்டுப் படுகொலைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. புதிய சம்பவம் கர்ஸாயி அரசுடன் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்த ஒப்பந்தத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ ராணுவம் நாட்டை விட்டு வெளியேறினாலும் ஆப்கான் விவகாரங்களை கட்டுப்படுத்த சிறப்பு தூதரக-ராணுவ குழு ஆப்கானிலேயே தங்குவதற்கு அமெரிக்காவை அனுமதிப்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
ஒரு வீட்டில் மட்டும் 11 பேரை நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவ வீரன் கொலைச் செய்துள்ளான். அதில் நான்கு பேர் 6 வயதுக்கு கீழான பெண் குழந்தைகள் ஆவர். கொலைச் செய்த பிறகு வெறி அடங்காமல் ராணுவ வீரன் இறந்த உடல்களையெல்லாம் ஒரே இடத்தில் போட்டு தீவைத்து கொளுத்தியுள்ளான். ராணுவ வீரன் இடத்தை விட்டு அகன்ற பிறகு அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று தீயை அணைத்துள்ளனர்.

No comments:

Post a Comment