Sunday, February 26, 2012

இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து மீராகுமார் வியப்பு


meera kumar
இஸ்லாமாபாத்:இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் 17 பேருடன் பாகிஸ்தான் சென்றுள்ள பாராளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் மீராகுமார் பாகிஸ்தானியர்களின் அன்பை பார்த்து தாம் வியப்படைவதாக கூறியுள்ளார். மேலும் இரு நாடுகளிடையே நல்லுறவு வளர தாம் கடவுளிடம் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாராளமன்றத்தின் மக்களவை சபாநாயகர் மீரா குமார் கடந்த வெள்ளியன்று லாஹூரில் உள்ள மினார்-ஏ பாகிஸ்தானுக்கு சென்றிருந்த அவர் அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் செய்திக் குறிப்பை எழுதியுள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு வருகைத் தந்துள்ள முதல் இந்திய பாராளுமன்ற சபாநாயகர் என்பதால் தனது வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளவே விரும்புகிறது என்றும் இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வந்துள்ள தனது குழு அன்பு மற்றும் அமைதிக்கான செய்தியை கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மீராகுமாரும் அவருடன் சென்றிருந்த பிரதிநிதிகள் அனைவரும் லாஹூரில் உள்ள பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு சென்றிருந்தனர் மேலும் அந்த சட்டசபை சபாநாயகர் ரானா முஹம்மது இக்பாலை சந்தித்து பேசினார். மேலும் மீரா குமாரின் பாகிஸ்தான் வருகை குறித்து அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் பெஹ்மிதா மிர்சா மீரா குமாரின் வருகை சிறப்பு மிகுந்தது என்றும் மேலும் பாராளுமன்ற உறவுகளின் மூலம் இரு நாடுகளும் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment