Thursday, February 23, 2012

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: சர்வதேச அணு சக்தி ஏஜன்சி !!


CAZDCWW0
டெஹ்ரான்:ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி(ஐ.எ.இ.எ) ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஈரானின் அணுமையங்களில் பரிசோதனை நடத்தும் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு திரும்புவதாக ஐ.எ.இ.எ குழு தலைவர் ஹெர்மன் நக்கேர்ட்ஸ் அறிவித்துள்ளார்.
நக்கேர்ட்ஸின் தலைமையிலான சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழு இரண்டு தினங்கள் சுற்றுப்பயணமாக கடந்த திங்கள்கிழமை ஈரானுக்கு வருகை தந்தது. ஜனவரி மாதமும் இக்குழு ஈரானுக்கு வருகை தந்து அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதேவேளையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்படும் தெற்கு டெஹ்ரானில் பார்ச்சின் ராணுவ மையத்தை பரிசோதிக்க கோரும் ஐ.எ.இ.எ தலைவர் யூகியா அமானோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த அறிக்கையில் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் சந்தேகிக்கும் மையமாக பர்ச்சின் ராணுவ காம்ப்ளக்ஸை ஐ.எ.இ.எ உட்படுத்தியது. ஐ.எ.இ.எவின் குற்றச்சாட்டை ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐ.எ.இ.எவுடன் கூடுதலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று ஈரானின் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானியா கூறியுள்ளார். ஆனால், இதனை ஐ.எ.இ.எ உறுதிச்செய்யவில்லை. ஐ.எ.இ.எ பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து மோதல் சூழல் பிராந்தியத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக கடந்த நவம்பர் மாதம் வெளியான ஐ.எ.இ.எ அறிக்கையை தொடர்ந்து ஈரானுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தடைகளுடன் களமிறங்கியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் முயற்சிக்கவில்லை என்று ஈரானின் ஆன்மீக உயர் தலைவர் ஆயத்துல்லாஹ் காம்னஈ கூறியிருந்தார்.

No comments:

Post a Comment