
தோஹா:உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தர் நாட்டிற்கு முதலிடம். தனிநபர் வருமானத்தை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போப்ஸ் மேகஸின் தயாரித்த பட்டியலில் கத்தர் முதலிடத்தை பிடித்துள்ளது.
மிகச்சிறந்த எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு சேமிப்பும் கொண்ட இந்த வளைகுடா நாட்டின் மக்கள் தொகை 17 லட்சமாகும். 2010 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி கத்தரின் தனிநபர் வருமானம் 88 ஆயிரம் டாலருக்கும் அதிகமாகும். அதேவேளையில், ஆறாவது இடத்தை பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின்(யு.ஏ.இ) தனிநபர் வருமானம் 47 ஆயிரம் டாலராகும். இன்னொரு வளைகுடா நாடான குவைத் பட்டியலில் 15-வது இடத்தை பிடித்துள்ளது.
2020-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளும், 2022-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளும் கத்தரில் நடைபெற உள்ளது. அடிப்படை வசதிகளை(infrastructure) சீர் செய்வதில் கத்தர் அரசு தற்போது அதிகமாக பணத்தை செலவழித்து வருகிறது. உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடான லக்ஷம்பர்க் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் 3-வது இடத்தையும், நார்வே மற்றும் புரூனே முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்காவிற்கு 7-வது இடம்.
ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி, லைபீரியா, காங்கோ ஆகியன மிகவும் ஏழை நாடுகளாக இடம் பெற்றுள்ளன. மிகவும் ஏழ்மை நாடான காங்கோவின் தனிநபர் வருடாந்திர வருமானம் 312 டாலர் மட்டுமே. இவ்வாறு போப்ஸ் பத்திரிகை கூறுகிறது.
No comments:
Post a Comment