
வாஷிங்டன்:ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பிராந்தியத்தில் கடுமையான எதிர் விளைவுகளை உருவாக்கும் என்று அமெரிக்க கூட்டுப்படை குழு தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டங்களை சில காலம் தாமதப்படுத்தலாம். ஈரானை தாக்க இஸ்ரேலுக்கு பலம் உள்ளது. ஆனால், ஈரானில் சில மையங்கள் இஸ்ரேல் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மறைவாக உள்ளன. ஆகையால் ஈரானை இஸ்ரேல் தாக்க முற்படுவது கவலைக்குரியது என்று டெம்ப்ஸி கூறினார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு குண்டை தயாரிப்பதற்குத்தான் என்பது உறுதிச் செய்யப்படாதவரை அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது தவறான முன்னுதராரணமாகும். ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் கட்டத்தை அடையவில்லை என்று டெம்ப்ஸி கூறினார். ஏற்கனவே பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக்கும் ஈரானின் மீது தாக்குதல் நடத்துவதற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சீனாவுடன் மோதலுக்கோ, ஆயுத போட்டிக்கோ நாங்கள் தயாரில்லை என்று டெம்ப்ஸி கூறினார். சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதே அமெரிக்க அரசின் நோக்கம் என்று டெம்ப்ஸி தெரிவித்துள்ளார். சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்பட்டால் அது உலக சமூகத்தை கடுமையாக பாதிக்கும். ஆனால், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான ஒபாமா அரசின் தீர்மானம் சரியான நடவடிக்கை என்று டெம்ப்ஸி கூறினார்.
No comments:
Post a Comment