Saturday, December 24, 2011

கொலைகாரர்களின் போராட்டம்!


DEC 24: ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் துவங்கியிருக்கும் காலவரையற்ற போராட்டத்தினால் 10 நோயாளிகள் முறையான சிகிச்சை இல்லாமல் உயிரிழந்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் டாக்டர்கள் பல ஆண்டு காலமாக பதவி உயர்வுக்காக காத்திருப்பதாகவும், சம்பள விகிதாச்சாரம் போதாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு ஆஸ்பத்திரியை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருவோர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார்  10ஆயிரம் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: உலகிலேயே டாக்டர் தொழில் செய்பவர்கள் மாதிரி பணம் சம்பாதிப்பவர் வேறுயாரும் இருக்க முடியாது. முன்னொரு காலத்தில் வைத்தியர்கள் மருத்துவம் செய்வதை மக்கள் தொண்டாக நினைத்தார்கள். இப்போது மருத்துவத்துறை என்பது கொள்ளைகாரர்களின் கூடாரமாகி விட்டது.  மக்கள் தொண்டு என்பது மறுவி பெரும் வியாபாரமாகி போனது.

சம்பளம் போக அரசின் மாத்திரை, மருந்துக்களை வெளியே விற்ப்பது, தனியாக கிளினிக் வைத்து நடத்துவது என்று சம்பாத்தியம் 'களை" கட்டும் இவர்களே போராட்டம் என்று குதித்தால் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நிலைமையை என்னவென்று சொல்வது. எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் கோஷம் போடுவதை பாருங்கள் இவர்கள் டாக்டர்களா? இல்லை கொலைகாரர்களா? இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
 ரௌத்திரம் பழகு 

No comments:

Post a Comment