Sunday, December 25, 2011

அத்வானியை கொல்ல குண்டு: சி.பி.ஐ விசாரணை கோருகிறார் ஹகீம்


மதுரை:பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி அடுத்த பிரதமராகும் கனவுடன் நடத்திய ஜனசேதனா ரத யாத்திரையின் போது (அக்டோபர் 27) தமிழகத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவர் செல்லும் வழியான ஆலம்பட்டி கிராமத்தில் பாலத்திற்கு கீழே குண்டுவைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹகீம் என்பவர் சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெய்ஹிந்த்புரத்தை சார்ந்த ஹகீம் தனது மனுவில் கூறியிருப்பதாவது: ‘என்னை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து என்னை அவர்கள் சித்திரவதைச் செய்தனர். அவர்களின் தாக்குதலில் காயமடைந்து ராஜாஜி
மருத்துவமனையில் நான் சிகிட்சைப் பெற்றேன். சம்பவம் நடைபெறும் வேளையில் நான் சென்னையில் இருந்தேன். அதற்கான ஆதாரத்தை அளித்த பிறகும் என்னை போலீசார் சித்திரவதை செய்வதை நிறுத்தவில்லை. காய்கறி வியாபாரியாக அமைதியாக நான் வாழ்க்கை நடத்தி வந்தேன்’ இவ்வாறு ஹகீம் கூறியுள்ளார்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ராமசுப்ரமணியன், சில போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஹகீம் தற்பொழுது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment