ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், துருக்கி மக்கள் விரும்பினால், தூக்கு தண்டனையை மீண்டும் கொண்டு வர ஆதரவளிப்பதாக அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் கூறியுள்ளார்.
பிரஞ்சு தொலைகாட்சியில் பேசிய எர்துவான்,
சுமார் 50 ஆண்டுகளாக, துருக்கியை ஐரோப்பிய ஒன்றியம் அதன் வாசலில் காக்க வைத்தாகவும், அந்த சமயத்தில், துருக்கியைவிட குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் எதிர்ப்பாளர்கள் இஸ்தான்புல்லில், அனைத்து கட்சி பேரணி ஒன்றை நடத்த தயாராகி உள்ள நிலையில் அதிபரின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
No comments:
Post a Comment