தஞ்சாவூர் மாவட்டம் சம்பைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தொடரும் விபத்துக்களை தடுக்க சாலை ஓரம் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்றி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலைகளில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் அனைத்தும் நேரத்தை கணக்கில் கொண்டு 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கிறது.
இருசக்கர வாகனம், மாட்டுவண்டிகள் மற்றும் கார் விபத்துகள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 15க்கும் மேற்பட்ட உயிர் பலி ஏற்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் பகுதியான கொள்ளுக்காடு முதல் கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரைசாலையின் இரு புறங்களிலும் வேலிக்கருவை மரங்கள் வளர்ந்து சாலையை மூடியுள்ளதால் வளைவான சாலைகளில் முன்னும் பின்னும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து நிகழ்கிறது. சாலையோரம் வளர்ந்துள்ள வேலிகருவைகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் அக்கறை எடுப்பதில்லை. கடந்த காலங்களில் ஆங்காங்கே சோதனைசாவடிகள் அமைக்கப்பெற்று இரும்பு தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் குறைக்கப்பட்டது.
ஆனால் தற்போது சோதனைசாவடிகளும் கிடையாது. தடுப்புகேட்டுகளும் இல்லை. இதுவும் விபத்திற்கு ஒரு காரணமாகும். மேலும் சேதுபாவாசத்திரம் -சம்பைபட்டினம் தொடங்கி கட்டுமாவடி கணேசபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் கிராமபுறங்களில் இருந்து வந்து சேர்கிறது. இந்த சாலைகள் இணையும் இடங்களில் அவரவர் பட்டாநிலம் உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரைசாலையில் வரும் வாகனங்கள் தெரியாவண்ணம் கட்டிடங்களை கட்டி குடியிருந்து வருகின்றனர்.
கட்டிடம் இல்லாத சாலைகளில் வேலிக்கருவை வளர்ந்து மூடியுள்ளது. இதனால் இணைப்பு சாலைகளிலிருந்து கிழக்கு கடற்கரைசாலையை சென்றடையும் வாகனங்கள் சாலையில் வரக்கூடிய வாகனங்களை பார்ப்பதற்குள்ளாக அதிவேகத்தில் வரக்கூடிய வாகனங்கள் மோதி விபத்துகளும் உயிர் சேதங்களும் ஏற்படுகிறது. இதே போல் தொடர்ந்து வரும் விபத்துகளை தடுக்கவேண்டு மென்றால் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் உள்ள வேலிக்கருவை மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதே போல் இணைப்பு சாலைகள் அனைத்திலும் உள்ள வேலி கருவை மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து சாலைகளிலும் வேகத்தடை அமைக்க மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேதுபாவாசத்திரம்-சம்பைபட்டினம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment