பாட்னா: கடந்த அக்டோபரில் பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன.இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இத்தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக அவகில்லா கிராமத்தை சேர்ந்த மக்சூத் ஆலம் என்பவரின் மகன் அஸ்லாம் பர்வேஷ் என்பவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து ராம்பூர் காவல்நிலைய அதிகாரி ராஜிவ் ரஞ்சன் கூறுகையில்“இதுவரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையில் இக்குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாக்சீன் அக்தர் என்ற மோனுவை தேடிக்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment