அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்தில், மீன் பிடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அய்னுல் ஹக்கே பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
தெதெலியா கோர்டோய் பீல் பகுதியில் காலை 10.30 மணியளவில் திரண்ட 5,000க்கும் அதிகமானோர், அந்த இடத்தில் மீன்பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த இடத்தின் குத்தகைதாரருடைய பணியாளர்கள் அவர்களை அங்கு மீன் பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.இதனால் அந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி, ரப்பர் குண்டுகளால் சுட்டபோதிலும் அவர்கள் தங்களுக்குள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.
எனவே கூட்டத்தினரை கலைக்க, போலீஸார் 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பிஸ்வாஜித் போர்டோலோய் (19) என்பவர் உயிரிழந்தார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஹக்கே கூறினார்.
No comments:
Post a Comment