Monday, March 10, 2014

முசாஃபர்நகர் கலவர வழக்கு: 10 முஸ்லிம் தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!


2014-03-09_153130முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கலவரத்தை தூண்டியதாக 10 முஸ்லிம் தலைவர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவினர்(எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
முசாஃபர்நகர் மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி நரேந்தர் குமாரிடம் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி கலபார் பகுதியில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக 10 முஸ்லிம் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. கதீர் ராணா, அக்கட்சியைச் சேர்ந்த சார்தவால் தொகுதி எம்.எல்.ஏ. நூர் சலீம் ராணா, மிரன்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மெளலானா ஜமீல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முன்னாள் அமைச்சர் சயீத்-உல்-ஸமா, அவருடைய மகன் சல்மான் சயீத் உள்பட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment