டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்ததை அடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுக்களை வாங்கி இருப்பு வைப்பதில் மதுபிரியர்கள் மற்றும் கள்ளச்சந்தை வியாபாரிகள் காட்டிய ஆர்வத்தினால், கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மது விற்பனை ரூ.255 கோடியை தாண்டி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லட்சத்து 81 ஆயிரம் பெட்டிகள் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபான வகைகள் விற்று தீர்ந்துள்ளன. ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளில் மது விற்பனை ரூ.100 கோடிக்கு மேல் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவல்லாமல் வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக சென்னையில் உள்ள தனியார் ஷாப்பிங் மால்களில் திறக்கப்பட்டுள்ள ‘எலைட்’ மதுபான கடைகளில் மொத்தம் ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

No comments:
Post a Comment