Wednesday, January 15, 2014

பீகாரில் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்: சுஷில் மோடி

பாட்னா: நரேந்திர மோடியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் பிரச்சாரம் கட்சிக்குப் பின்னடவை ஏற்படுத்தும் என்று பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் தலைவருமான சுசில் குமார் மோடி தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் நடந்து வருவதால் பீகாரில் முஸ்லிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
லாலு பிரசாத் அரசியலுக்கு திரும்பியிருப்பது முஸ்லிம்களை பா.ஜ.க.வில் இருந்து விலக்கும். 25 சதவீத மேல் சாதியினரும், வைஷ்யர்களும் பா.ஜ.க.வுடன் உள்ளனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கும், பா.ஜ.க.வுக்கும் மத்தியில் பிரிந்து நிற்கும் யாதவர்களையும் பா.ஜ.க.வின் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறோம்.
லாலு பிரசாத் யாதவ் தற்போது காங்கிரஸுடன் களமிறங்கினால் இம்முறை ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு சாதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஊடகங்கள் பரப்புரை செய்வது போல பீகாரில் செல்வாக்கு இல்லை. நரேந்திர மோடியால் மே. வங்கத்திலோ, கேரளாவிலோ சென்று பா.ஜ.க.வுக்காக வெற்றி பெற முடியுமா? உள்ளூர் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தாலே முடியும் என்று பீகாரில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு குறைவைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார்.

No comments:

Post a Comment