Sunday, September 8, 2013

முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்க மோடி வேலை - பாஜக திட்டம்!

முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்க மோடி வேலை - பாஜக திட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் 'முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் மோடி வேலை'யின் ஒரு பகுதியாக, தொப்பியும் ஜிப்பாவும் அணிந்த அஜ்மீர் தர்கா பிரமுகர்களைக் கொண்டு,

நரேந்திர மோடியை கவுரவிக்கும் விழா ஒன்றை அக்கட்சி செப்டம்பர் 10ஆம் தியதி நடத்த உள்ளது. பிங்க் சிட்டி என்று அழைக்கப் பெறும் ஜெய்ப்பூரில் இவ்விழா நடைபெறும் என்று தெரிகிறது.

இவ்விழாவை நன்கு வடிவமைக்கும் விதமாக, கணிசமான அளவு முஸ்லிம்களை இவ்விழாவில் திரள வைக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பாரம்பரிய உடைகளான ஷெர்வானி (ஜிப்பா) மற்றும் தொப்பி ஆகியவற்றை அவர்கள் அணிந்து காட்சி அளிப்பது ஊடகங்களின் வழியாக பரப்பப்படவும் வேண்டும் என்று கட்சியின் சிறுபான்மை அணியை பாஜக மூத்த பிரமுகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனராம்.

பாஜக பிரமுகர்களுள் ஒருவரும், தர்கா முன்னவருமான சையத் அஃப்ஷான் ஷிஸ்தி, இவ்விழாவிற்கான ஏற்பாட்டுப் பணியில் மும்முரமாக உள்ளதகவும், இதன் பொருட்டு மாநில பாஜக தலைவர் வசுந்தர ராஜேவை அவர் சந்தித்து பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விழாவில் கட்சியின் இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்க்குக்கும், குஜராத் முதல்வர் மோடிக்கும் தஸ்தர்பந்தி எனப்படும், தர்கா படத்துடன் கூடிய மரியாதை செய்யப்பட இருக்கிறதாம். தர்காவுக்கு வரும்படி அத்தலைவர்களைத் தான் அழைக்க உள்ளதாகவும் ஷிஸ்தி தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் சிறுபான்மை (முஸ்லிம்) மக்களுக்கு இவ்விழா குறித்த குறுஞ்செய்தி தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இரண்டாயிரம் புர்கா அணிந்த பெண்கள் உடபட, குறைந்தது பத்தாயிரம் பேர் இவ்விழாவில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆண்கள் கட்டாயமாக தங்கள் முஸ்லிம் புற அடையாளத்துடனேயே (தொப்பி போன்றவையுடன்) கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாஜகவின் மாநில சிறுபான்மை அணித் தலைவர் அமீன் கான் பத்தான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய செயற்குழு உறுப்பினரும், சிறுபான்மைப் பிரிவு பிரமுகரும், தர்கா முன்னோடியுமான சையத் இப்ராஹிம் ஃபாக்கருக்கு, இது குறித்த அறிவுரைகள் பாஜக தலைவர்களால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இவ்விழாவிற்கு (முஸ்லிம்) மக்களை அழைத்து வர வேண்டி, போதிய அளவு பேருந்துகள் பாஜகவினரால் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment