Sunday, September 8, 2013

சிந்திக்க சில நொடிகள்............. கலவரச் சதுர்த்தி தேவையா???

சிந்திக்க சில நொடிகள்.

கலவரச் சதுர்த்தி தேவையா???


கலவர ஊர்வலங்கள் தேவைதானா?
இந்து முன்னணியின் கலவர
ஊர்வலங்களுக்கு தடை வருமா?
விநாயகர்
சதுர்த்தி என்றாலே இந்து முன்னணி,
இந்து மக்கள் கட்சியினரின் ஆவேச, ஆபாச
கூச்சல்களும், ஊர்வலம் என்ற பெயரில்
நடத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான
கலவரங்களும்தான்
நினைவுக்கு வருகின்றன.
பத்து வருடங்களுக்கு முன்னால் விநாயகர்
சதுர்த்தி என்றால் சிறிய அளவிலான மண்
பிள்ளையாரை வீடுகளில் வைத்து வழிபடும்
இந்து சகோதரர்கள் அதை சில நாட்களுக்குப்
பின்னால் குளங்களிலோ அல்லது அருகில்
உள்ள நீர்நிலைகளிலோ அமைதியான
முறையில் கரைப்பது வழக்கம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்லின் தமிழக
முகமூடியான
இந்து முன்னணி எப்போது தமிழகத்தில் கால்
பதித்ததோ அன்று முதல் வீடுகளில் இருந்த
பிள்ளையார் சிலைகள் வீதிகளுக்கு வந்தன.
குடும்பங்களில் சிறுவர்களும், பெண்களும்
மகிழ்ச்சியோடு வழிபட்டுவிட்டு குடும்பமாகச்
சென்று சிலைகளை கரைத்து வந்த வழக்கம்
போய், பெருங்கும்பலாக
குடித்துவிட்டு பொதுப் பாதைகளில்
ஆபாசமான செய்கைகளை காட்டியபடி,
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள்
வழியாகத்தான் ஊர்வலம் போவோம்
என்று முரண்டு பிடித்து வருவதால்
ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை விட
இவர்களின் பாதுகாப்புக்கு(?) வரும்
போலீசார் எண்ணிக்கையில் அதிகம்
இருப்பதால், போலீஸ் ஊர்வலம்தான்
நடக்கிறதோ என்று எண்ணக்கூடிய
அளவுக்கு இன்று பிள்ளையார் ஊர்வலங்கள்
நடந்து வருகின்றன.
தங்களின் அரசியல் பலத்தை பெருக்கிக்
கொள்வதற்காகவும், வலிமையைக்
காட்டுவதற்காகவும் எவ்வாறு அரசியல்
கட்சிகளால் பேரணிகளும் ஊர்வலங்களும்
நடத்தப்படுகிறதோ அதுபோலத்தான்
இந்துத்துவ இயக்கங்கள் மக்களிடம்
பிரச்சாரம் செய்யக்கூடிய
அளவுக்கு தங்களிடம் கொள்கை பலம் செயல்
திட்டங்கள் இல்லாததால் மக்களின் மத
நம்பிக்கைகளை தங்களுக்கு சாதகமாகப்
பயன்படுத்தி தங்களின் அரசியல்
செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கும்
தங்களை இந்து மதத்தின் காவலர்களாக
காட்டிக் கொள்வதற்கும் இத்தகைய
ஊர்வலங்களை திட்டமிட்டு உருவாக்கி அரசியல்
லாபம் ஈட்டி வருகின்றன.
கலவரத்தை ஏற்படுத்தும் இவர்களின்
அரசியல் ஊர்வலங்களை மதரீதியாக
பார்ப்பதாலேயே இவர்களின் ஊர்வலங்
களை அரசுகளும், நீதிமன்றங்களும்
தடை செய்வதற்கு தயக்கம்
காட்டி வருகின்றன. வருடந்தோறும்
விநாயகர் சிலை ஊர்வலத்தை தடை செய்ய
நீதிமன்றத்தில் வழக்குகள்
தொடரப்படுவதும், வழி பாட்டுரிமை என்ற
பெயரில் இவர்களின் கலவர
ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதும்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிந்தியுங்க இந்து மக்களே:- இந்து மக்களின் பெயரைக் கெடுக்கும் இந்த கலவரச் சதுர்த்தி தேவைதானா???

No comments:

Post a Comment