
மசூதி சுவரை இடித்தது ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்ல என்று உத்திர பிரதேச வஃக்புவாரியம் தெரிவித்துள்ளது.
உ.பி. அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மசூதி சுவரை இடித்தது ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்ல என்று வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மணல் கொள்ளையர்கள் தாம் மசூதி சுவரை இடித்து விட்டு துர்கா சக்தியின் மீது பழி போட்டுள்ளனர் என்று உ.பி வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மசூதியின் சுவரை இடிக்க வைத்து மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்க முயன்றதாகக் கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வஃக்பு வாரியம் தெரிவித்துள்ள கருத்து உ.பி. அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment