பீஜிங்:ஜிஞ்சியாங்கில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் இரண்டு உய்கூர் முஸ்லிம்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 3 பேருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி கஷ்காரில் நடந்த கலவரத்தில் அதிகாரிகள், உய்கூரைச் சார்ந்தவர்கள் உள்பட 21 பேர் பலியானார்கள்.
மூஸா ஹஸன், ரஹ்மான் ஹுபூர் ஆகியோருக்கு கஷ்கார் இண்டர்மீடியட் பீப்பிள்ஸ் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்களுக்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் ஜிஞ்சியாங்கில் இருந்து அரசு வெளியிடும் செய்திகள் மட்டுமே கிடைத்துள்ளது.
மதத் தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்ததாக ஐந்து பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வெடிக்குண்டை தயாரித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் சிலரை கண்டதை தொடர்ந்து அதிகாரிகள் கைதுச் செய்த வந்ததை தொடர்ந்து பிரச்சனை உருவானதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் ஒரு குடும்பத்தினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உருவான தர்க்கமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.முஸ்லிம் இளைஞரிடம் தாடியை மழிக்கவும், மனைவியிடம் முகம் மறைப்பதை நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதற்கு மறுத்ததால் போலீஸ் அவர்களை கைதுச் செய்துள்ளது.உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிராக அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளே மோதல்களுக்கு காரணம் என்று முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான வேல்ட் உய்கூர் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
ஜிஞ்சியாங்கில் 45 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.40 சதவீதம் பேர் ஹான் இனத்தவர்.ஹான் இனத்தவரும், அதிகாரிகளும் இணைந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி பொய்வழக்குகளை பதிவுச் செய்வது வழக்கமாகும்.2009-ஆம் ஆண்டு இருபிரிவினருக்கு இடையே நிகழ்ந்த மோதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment