ஸன்ஆ :எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியை ராணுவம் புரட்சியின் மூலம் வெளியேற்றியது அரபுலக புரட்சியின் முடிவை சுட்டிக்காட்டுவதாக என்று நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டைச் சார்ந்த தவக்குல் கர்மான் கூறியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தவக்குல் கர்மான் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: எகிப்தில் முதல் ஜனநாயக அரசை பதவி நீக்கம் செய்துள்ளனர்.அரபு புரட்சி நடந்துள்ள நாடுகளில் இது முதல் சம்பவமாகும்.எகிப்து மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு திரும்ப செல்வதையே நான் அங்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் உணர்த்துகிறது.மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களுக்கு
எகிப்தில் இடமில்லை.பிராந்தியத்தில் எதிர் புரட்சி உருவாகிறது.அரபுலக புரட்சி ஜனநாயகத்தை கட்டியெழுப்பியது என்றால் ராணுவ புரட்சி அதனை தகர்த்துவிட்டது.முர்சியை வெளியேற்றியதை கண்டிக்காத அமெரிக்காவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.ராணுவ புரட்சி ஜனநாயகத்தை புனரமைக்கும் என்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரியின் அறிக்கை வெட்க கேடானது. அரபுலக புரட்சியில் இருந்து அமெரிக்க அரசு எதனையும் படிக்கவில்லை.இவ்வாறு தவக்குல் கர்மான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment