Thursday, August 15, 2013

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் ஐ.டி வல்லுநரை விடுவித்தது நீதிமன்றம்!

மும்பை:2002-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஐ.டி வல்லுநரான முஸ்லிம் வாலிபரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலைச் செய்துள்ளது.தாஜுல் காஸி சித்தீகி என்ற 40 வயது ஐ.டி நிபுணருக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி மும்பை போலீஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2002-ஆம் ஆண்டு காட்கோப்பர் பேருந்து குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சூத்திரதாரி தாஜுல் காஸி சித்தீகி என்று போலீஸ் கடந்த 10 ஆண்டுகளாக கூறிவந்தது.2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சித்தீகியை ஹைதராபாத்தில் வைத்து மும்பை போலீஸ் கைதுச் செய்தது.பொடாச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்
பல்வேறு பிரிவுகளில் சித்தீகி மீது வழக்கு தொடரப்பட்டது.பின்னர் 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சித்தீகி விடுதலைச் செய்யபப்ட்டார்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த சித்தீகி கைதுச் செய்யப்பட்டதால் அவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது.இவ்வழக்கில் சித்தீகிக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மும்பை போலீஸ் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.சித்தீகியின் லேப்டாப்பும், இ-மெயில் அக்கவுண்டும் விரிவாக ஆராயப்பட்டபோதும் குற்றகரமான எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே.சவான் சித்தீகியை குற்றமற்றவர் என்று கூறி விடுதலைச் செய்து உத்தரவிட்டார்.முக்கிய குற்றவாளி என குற்றம் சாட்டி சித்தீகியின் உயர் பதவியை இழக்கச் செய்து, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பிறகு அவருக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று போலீஸ் ஒப்புக்கொண்டுள்ளது என்று சித்தீகியின் வழக்கறிஞர் ரெபேக்கா கான்ஸால்வ்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment