Wednesday, July 31, 2013

கல்லூரி மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் வெடிகுண்டு வீச்சு!

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் பயிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதில் பெரும் பதற்றம் நிலவியது.
கேரளாவில் கல்லூரிக்குள் அரசியல் நடத்த அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் அரசியல் நடத்த முயன்றதாக ஆர்.எஸ்.எஸின் கிளை அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை அக்கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து  அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும் அவர்கள் முகமூடி அணிந்து கொண்டு கல்லூரிக்குள் சென்று பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர் இதுதொடர்பாக  15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கைது செய்யப் பட்டதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில நிர்வாகிகள், போலீஸ்நிலையம் சென்று கைதானவர்களை விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டமும் நடத்தினர். இதனால் அம்மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment