புதுடெல்லி: "வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதறகான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன." என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2002-ஆம் ஆண்டு மவ் கோயில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 6 ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உறுப்பினர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு பேரிடமும் நடத்திய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோ என்னிடம் உள்ளது. இதனை ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். ஆறு சங்க்பரிவார் உறுப்பினர்களில் சுனில் ஜோஷியும், ராம்ஜி கல்சங்கராவும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வகுப்புவாதத்தை கிளறிவிட்டு கலவரம் உருவாக்க ஆர்.எஸ்ஸும், பா.ஜ.கவும் முயற்சிக்கின்றன. கலவரம் இல்லாமல் பா.ஜ.கவால் வெற்றிப் பெற முடியாது" என்று .திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment