பாரிஸ்:சுதந்திர ஃபலஸ்தீன் தேசம் நிதர்சனமாக இஸ்ரேல்-ஃபலஸ்தீன் அமைதிப்பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கவேண்டும் என பிரான்சு அதிபர் ஃப்ரான்சுவா ஹோலந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரிஸில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹோலந்த், ஃபலஸ்தீன் தேசம் உருவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
அதேவேளையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயாராகாவிட்டால் உறுப்பினர் பதவியைக் கோரி ஐ.நாவை அணுகுவோம் என்று மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.ஐ.நாவில் பூரண உறுப்பினர் பதவியை கோரி ஃபலஸ்தீன், கடந்த செப்டம்பர் மாதம் அளித்த கோரிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. அமெரிக்கா இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.
இச்சூழலில் வாடிகானைப்போல உறுப்பினர் பதவியைக் கோரி மீண்டும் ஐ.நாவை அணுகுவோம் என்று அப்பாஸ் தெரிவித்தார். ஐ.நா பொது அவையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.மேலும் உறுப்பினர் அல்லாத பதவிக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரம் தேவையில்லை. ஆனால், வாக்குரிமை கிடையாது.அதேவேளையில் சர்வதேச அளவில் தேசம் என்ற பதவி அங்கீகரிக்கப்படும். ஆகவே இத்தகைய உறுப்பினர் பதவிக்காக ஐ.நாவை அப்பாஸ் அணுக உள்ளார்.
இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை அதிகரிப்பது அமைதிப்பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க தடையாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும். நேற்று முன்தினம் 850க்கும் மேற்பட்ட யூத குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்தார்.
courtesy : www.thoothuonline.com
courtesy : www.thoothuonline.com
No comments:
Post a Comment