Wednesday, May 9, 2012

அல்ஜஸீராவின் பீஜிங் பீரோ மூடல்!


Al Jazeera to close Beijing news bureauபீஜிங்:சீன தலைநகரான பீஜிங்கில் உள்ள நியூஸ் பீரோவை அல்ஜஸீரா மூடிவிட்டது. ரிப்போர்டர் மெலிஸா சானை சீனாவில் இருந்து வெளியேற்றியது மற்றும் புதிய ரிப்போர்ட்டர்களுக்கு விசா அனுமதிக்காதது ஆகியவற்றை கண்டித்து பீஜிங்கில் உள்ள ஆங்கில செய்தி சேனலுக்கான நியூஸ் பீரோவை அல்ஜஸீரா பூட்டியுள்ளது.
பீரோ மூடியது குறித்து வருத்தம் அடைவதாகவும், புதிய ரிப்போர்டர்களுக்கு விசா அனுமதிப்பதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று அல்ஜஸீரா தெரிவித்துள்ளது.
1998-ஆம் ஆண்டிற்கு பிறகு சீனா வெளியேற்றும் முதல் ரிப்போர்டர் மெலிஸா சான் ஆவார். சீன அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டின் வெளிநாட்டு ஊடக பணியாளர்கள் கூட்டமைப்பு(எஃப்.சி.சி.சி) கண்டனம் தெரிவித்துள்ளது.
ரிப்போர்டர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஊடக நிறுவனங்களுக்குத்தான் உண்டு. இவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு அங்கீகரிக்க இயலாது என எஃப்.சி.சி.சி தெரிவித்துள்ளது.
அண்மையில் அல்ஜஸீராவில் ஒளிபரப்பான ஆவணப்படம் ஒன்று மெலிஸாவை சீன வெளியேற்ற காரணமாகும்.

No comments:

Post a Comment