Monday, May 7, 2012

பிரான்ஸ்:சர்கோசியின் அத்தியாயம் முடிந்தது – ஹாலண்டே புதிய அதிபர்!


Hollande defeats Nicolas Sarkozy to become presidentபாரிஸ்:பிரான்ஸ் நாட்டில் வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு அதிபரான சர்கோசி அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். சோசியலிச வேட்பாளரான பிராங்காய்ஸ் ஹாலண்டே வெற்றிப் பெற்றுள்ளார்.
பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 2-வது கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வந்தது. முடிவுகள் வெளியாக துவங்கியதில் இருந்து சர்கோசி பின்தங்கினார். ஹாலண்டேவுக்கு 52 சதவீத வாக்குகளும், சர்கோசிக்கு 48 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
1995-ஆம் ஆண்டுக்கு பிறகு சோசியலிச தலைவர் ஒருவர் பிரான்சு அதிபராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரான்சு தலைநகர் பாரிஸில் உள்ள லா பாஸ்டைல் பகுதியில் இடதுசாரி தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாட குவிந்துள்ளனர்.
ஐரோப்பாவை உலுக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் பிரான்சு பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வலதுசாரி நடவடிக்கைகளால் மக்களிடம் சர்கோசி எதிர்ப்பை சம்பாதித்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹாலண்டே, அதிபர் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளார். ஹாலண்டேவின் வெற்றி ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment