
முஸஃபர்நகர்:சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் இந்தியா சுற்றுப் பயணத்திற்கான விசாவை ரத்துச்செய்ய வேண்டும் என இந்தியாவின் பிரபல இஸ்லாமிய கல்வி கலாச்சாலையான தாருல் உலூம் தேவ்பந்த் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ருஷ்டி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதால் அவருடைய விசாவை ரத்துச்செய்ய வேண்டும் என தாருல் உலூம் துணைவேந்தர் மவ்லானா அபுல்காஸிம் நுஃமானி கோரிக்கை விடுத்துள்ளார். இம்மாதம் இறுதி வாரத்தில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்க ருஷ்டி இந்தியா வருகிறார். ருஷ்டி மீதான முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வை மத்திய அரசு மதிக்கவேண்டும் என நுஃமானி கேட்டுக்கொண்டார்.
2007-ஆம் ஆண்டு இலக்கிய விழாவில் கலந்துக்கொள்ள இந்திய வம்சாவழியை சார்ந்த ருஷ்டி இந்தியாவுக்கு வருகை தந்தார். உலக முழுவதும் உள்ள முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்த ருஷ்டியின் சாத்தானிக் வெர்ஸஸ் என்ற நூல் இந்தியாவில் தடைச்செய்யப்பட்டது.
No comments:
Post a Comment