Wednesday, January 11, 2012

முஸ்லிம் வேட்டைக்கு எதிராக பாட்னாவில் எஸ்.டி.பி.ஐ பேரணி

பாட்னா:நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை அநியாயமாக வேட்டையாடுவதை கண்டித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பாட்னாவில் வெகுஜன பேரணியை நடத்தியது.
இப்பேரணியில் பல்வேறு மத-சமூக-அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். மக்களின் கவனத்தை ஈர்த்த பேரணி முஸ்லிம் வேட்டைக்கு எதிராக பலன் தரும் வகையில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
பாட்னா சயன்ஸ் கல்லூரியில் இருந்து துவங்கி அசோக்ராஜ் பத் வழியாக காந்தி மைதானம் கார்கில் சவுக் வரை பேரணி
நடைபெற்றது.
சமூகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்தோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். முஸ்லிம் வேட்டைக்கும், பொய் பிரச்சாரத்திற்கும் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டத்தை அடையாளம் காணவேண்டும் என பேரணி இறுதியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி ராம் கிருபால் கோரிக்கை விடுத்தார்.  போலீசார் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு துணைபோவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அக்தருல் ஈமான் எம்.எல்.ஏ, ரியாஸ் அஸீமாபாதி, அஃப்தாப் ஆலம், டாக்டர் ஜவ்ஹர் ஆகியோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment