Thursday, January 12, 2012

இந்தியாவிலிருந்து பல முக்கியஸ்தர்களின் வருகையை எதிர்பார்க்கும் இஸ்ரேல்


IsraelExpects More High-Profile Visits From India
டெல்லி:வெளியுறவுத்துறை அமைச்சர் (External Affairs Minister) எஸ்.எம்.கிருஷ்ணா மத்தியக் கிழக்கின் பயங்கரவாத நாடான இஸ்ரேலுக்கு பயணம் மேற்க்கொண்டதை தொடர்ந்து, மேலும் பல முக்கியஸ்தர்கள் இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் மேற்க்கொள்ள உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த மாத இறுதியில் மாநிலத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷசி தரூர் மற்றும் அவரது மனைவியும் ஒரு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக தங்களது சொந்த முயற்சியில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்க்கொள்ள இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தின் நடுவில் மத்திய நகர்புற அபிவிருத்தி அமைச்சர் (Union Minister of Urban Development) கமல் நாத்தும், மே மாதத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் (Human Resource Development Minister) கபில் சிபல் மற்றும் அவரைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சர் (Tourism Minister) சோபத் காந்த் சஹாய் ஆகியோரும்  இஸ்ரேலுக்கு பயணம் மேற்க்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகள் தெரிவிக்கும்போது; ‘கடந்த பதினொரு வருடங்களில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்க்கொண்ட  முதல் அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா என்றும், விவசாயம்(agriculture), நீர்ப்பாசனம்(irrigation),  நீர் சேமிப்பு(water conservation), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy), பாதுகாப்பு(defense) மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு (homeland security) ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதால்,மற்ற நாடுகளுடானான  எங்களின் உறவு மற்ற எந்த நாடுகளுடனும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.
சர்வேதேச அளவில் இந்தியா, ஃபலஸ்தீனிற்கு உதவி புரிந்தாலும், இந்தியா-இஸ்ரேல் உறவு செழுமையாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment