Saturday, December 24, 2011

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது


ஹைதராபாத்:முஸ்லீம்களை குறிவைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேரை கைது செய்திருப்பதாகவும் அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு முதலிய ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் ஹைதராபாத் வடக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் திரு சி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாளன்று பசுக்களை குர்பானி கொடுத்ததற்கு பழி வாங்கும் செயலாக இத்தாக்குதலை நடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26-ஆம் தேதி மஸ்தான் என்பவர் மீது அல்வாலில் உள்ள எல்பி நகரிலும், டிசம்பர் 13 இல் முஸ்தபா என்பவர் மீது பவன்பல்லி ஹஸ்மத்பேட் பகுதியிலும் மற்றும் செகந்தராபாத் திரிமுல்கேரியை சேர்ந்த ஃபெரோஸ் என்பவர் மீதும் ஹிந்துத்துவ வாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு மூலகாரணமான சிவகுமார் என்பவர் மீதும் அவருக்கு துணையாக இருந்த ஜீவகுமார், உப்பலராஜீ மற்றும் கோபி ஷியாம் சுந்தர் ஆகிய நால்வர் மீதும் ஐபிசி பிரிவு 153 A – இரு மதங்களுக்கிடையே இனவாத வெறுப்புணர்வை உருவாக்குதல், 120 B – கிரிமினல் சதி, மற்றும் 307 – கொலை முயற்சி என்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாத தொடக்கத்தில் முஸ்லீம்களை குறிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் சதா(எ)சதானந்த், சக்தி வினோத், உன்னி கிருஷ்ணன், பாபா பார்கவ், சூர்யவன்சி சந்தோஷ் மற்றும் பந்து கல்யாண் ஆகிய ஆறு பேரை போலிஸ் கைது செய்ததும் இவர்கள் ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் நகரில் முஸ்லிம்கள் பன்னிரெண்டு பேரை தாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment