Tuesday, February 21, 2017

இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 34,651 கற்பழிப்பு வழக்கு -சவூதி அரேபியாவில் 3 கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-இஸ்லாமிய தண்டனை சட்டம்

நடிகை பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் மற்றும் அவருடைய நண்பர்கள் பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்றும் அரபு நாட்டில் இருப்பது போல் இந்தியாவிலும் இஸ்லாமிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மலையாள சினிமா உலகினர் மற்றும் அறிவுஜீவிகள் வெகுவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

தங்களுக்கு பிரச்சினை என்று வரும்போது இஸ்லாமிய சட்டங்கள் தேவை என்று சொல்லும் இவர்கள் மற்ற நேரங்களில் இஸ்லாமிய தண்டனை சட்டத்தை கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
கொலைக்கு கொலை என்பது இஸ்லாமிய தண்டனை சட்டம்.

சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் இந்த சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு கொலையாளிகளுக்கு பொது இடத்தில் தலையை வெட்டி மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.

கற்பழிப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. திருடினால் கை வெட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொடுக்கப்படும் மரண தண்டனையை காட்டு மிராண்டி சட்டம் என்கின்றனர்.

இஸ்லாம் என்பது பிராக்டிக்கலான மார்க்கம் என்பதால் கொலையுண்டவரின் குடும்பத்தினரின் மன வேதனையை போக்கும் வகையில் இஸ்லாமிய தண்டனை சட்டங்களை அல்லாஹ் வகுத்து தந்துள்ளான்.

திருடியவருக்கு கையை வெட்டினால் காலம் முழுவதும் அவரும் திருட மாட்டார். அவரை காண்பவருக்கும் அச்சம் இருக்கும். கை வெட்டப்பட்டவரை கண்டாலே திருடர் என்று பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

இறைவன் வகுத்து தந்த இஸ்லாமிய சட்டத்தை காட்டு மிராண்டி சட்டம் என்று விமர்சித்தவர்கள் இன்று தங்களுக்கு பிரச்சினை என்றவுடன் இந்தியாவிற்கு இஸ்லாமிய சட்டம் தேவை என்கின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கக்கூடிய இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 34,651 கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் ஆளக்கூடிய சவூதி அரேபியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னரின் பேரரான இளவரசருக்கே மரண தண்டனை என்றாலும் அல்லாஹ்வுடைய சட்டம் யாருக்காகவும் வளையாது என்று தண்டனைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பாவனாவுக்கு மட்டுமல்ல, நிர்பயா, நந்தினி, ஹாசினி, ரித்திக்கா தவ்பிக் சுல்தானா என்று ஒவ்வொரு ஆண்டும் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்காக இஸ்லாமிய சட்டம் இந்தியாவிற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

No comments:

Post a Comment