உத்தம் சிங் நகர்: உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபூர் நகரில் 2011-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ரல், “தலைமறைவானவர்’ என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். சிபிசிஐடியின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டதாக காவல் துணை கண்காணிப்பாளர் ராஜீவ் மோகன் தெரிவித்தார். கலவரம் தொடர்பாக துக்ரலுக்கு எதிராக 3 மாதங்களுக்கு முன்னரே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைதிலிருந்து தப்பிக்க அவர் தலைமறைவாக உள்ளார்.
துக்ரல் இருக்கும் இடத்தை தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் பிரதியின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் வழிபாட்டு தளத்துக்கு வெளியே கிடந்ததைத் தொடர்ந்து ருத்ரபூரில் 2011-ம் ஆண்டு கலவரம் மூண்டது.
இதில், 4 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment