Monday, January 16, 2012

இம்ரான் கானுடன் இணைய விருப்பம் – முஷாரப்


புதுடெல்லி:பாகிஸ்தானின் முன்னால் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுடன் இணையத் தயார் என்று கூறியுள்ளார். ஆனால் இம்ரான் கானுக்கு கீழ் பணிபுரிய தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
துபையிலிருந்து கரன் தாப்பரின் “டெவில் அட்வகேட்” என்னும் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கானுடன் கூட்டணி சாத்தியமா என்று கேட்டதற்கு பாகிஸ்தானுக்கு மூன்றாவது அரசியல் தெரிவு தேவைப்படுகிறது என்று முஷாரப் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் நலனுக்காக தங்களின் அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டியுள்ளது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முன்னதாக மற்றும் தற்போதுள்ள அரசியல் தெரிவுகள் இரண்டும் பாகிஸ்தானில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் மூன்றாவது அரசியல் தெரிவு தேவைப்படுகிறது என்று முஷாரப் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்ரான் கானுடன் கூட்டணி சாத்தியமா என்று கேட்டதற்கு தன்னுடன் கூட்டணி வைப்பதை அவரின் கட்சியில் சிலர் விரும்பவில்லை என்றும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கூட்டணி அமைவதை விரும்பவில்லை என்றால் எனக்கும் கூட்டணியில் உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் இம்ரான் வெற்றிபெற்று பிரதமர் ஆனால் அவருக்கு கீழ் பணிபுரிவீர்களா என்று கேட்டதற்கு இதெல்லாம் பின்னால் நடக்க வேண்டியது என்றும் அவர் வெற்றி பெற்றால் அவர் பிரதமர் ஆவார் ஆனால் தன்னால் அவருக்கு கீழ் பணிபுரிய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment