புதுதில்லி, டிச.28: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக அண்ணா ஹசாரே ஒரு வார்த்தைகூட பேசமாட்டார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் தெரிவித்தார்.95 சதவீத ஊழல் நடைபெறும் மாநிலங்களில் லோக்ஆயுக்தவையும், லோக்பாலையும் பலப்படுத்துவதற்காக அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்வானியின் வீட்டு முன்பு அமர்ந்து மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவை எதிர்க்க வேண்டாம் என்று பாஜகவினரை அண்ணா ஹசாரே வலியுறுத்தலாமே? ஆனாஸ் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக ஹசாரே ஒரு வார்த்தை கூட பேசமாட்டார் என்பது எனது கணிப்பு என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment