Wednesday, December 21, 2011

ஹஜ் ஒதுக்கீடு:மத்திய அரசு புதிய கொள்கையை வகுக்கிறது


டெல்லி:தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஹஜ் ஒதுக்கீடு பங்கீடு செய்வது குறித்து மத்திய அரசு புதிய கொள்கையை வகுக்கப் போகிறது.
கடந்த ஆண்டு தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு வழங்கிய ஒதுக்கீட்டின் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கவும், தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வோருக்கு பாதுகாப்பு விஷங்களை முன்னிறுத்தியும் புதிய கொள்கையை
மத்திய அரசு உருவாக்க உள்ளது. இதுத்தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்.
45 ஆயிரம் இடங்களை பல வருடங்களாக பல்வேறு தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பங்கீடு செய்து அளித்து வருகிறது. இந்த இடங்கள் யாருக்கு? எவ்வாறு? பங்கீடுச் செய்யவேண்டும் என்பதை குறித்த திட்டங்கள் தயாராகி வருகின்றன. பழைய ஹஜ் டூர் ஆபரேட்டர்களுக்கும், புதிதாக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கும் ஹஜ் ஒதுக்கீடு விநியோகிப்பது குறித்து புதிய கொள்கை உருவாக்கப்படும். இதுத்தொடர்பாக தெளிவான ஒரு கொள்கை உருவாகுவதன் மூலம் தனியார் ஹஜ் நிறுவனங்கள் புனித பயணிகளிடமிருந்து அதிக தொகையை வசூலிப்பதும் பரிசோதிக்கப்படும்.
புனித பயணிகளின் தங்குமிடம், பயண வசதிகள் ஆகியவற்றைக் குறித்தும் மத்திய ஹஜ் கமிட்டி தகவல்களை கேட்கும். ஏற்கனவே ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தனியார் ஹஜ் நிறுவனங்கள் வழியாகவும் ஹஜ் செய்ய அனுமதிக்கக்கூடாது என மத்திய ஹஜ் கமிட்டி வெளியுறுவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment