திருச்சி: திருமாவளவனுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கடந்த சிலநாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் நடந்த திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.. பின்னர், மன்னார்குடி அடுத்த வடசேரி என்னும் ஊரில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக கிளம்பிய திருமாவளவன் கார் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு காத்திருந்ததாக, ஆலத்தூர் எனும் இடத்தில் 12 பேர் கைது கைது செய்யப்பட்டனர் அவர்கள் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
திருமாவளவன் மீது கொலை முயற்சி மேற்கொண்டமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருச்சியில் 150-க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள், திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து திருச்சி மண்டல ஐஜி ராமசுப்பிரமணியத்தின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனடியாக சாலையில் உட்கார்ந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அழைத்து பேசினர். அதன்பிறகு இதே கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அரசு, புறநகர் மாவட்ட செயலாளர் தமிழாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மனுக்கொடுத்தனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment