எகிப்து கோர்ட் நேற்று(28-02-15) அளித்த தீர்ப்பில் ஹமாஸ் இயக்கம் முழுவதும் தீவிரவாத இயக்கம் என அறிவித்துள்ளது, இதுகுறித்து ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபுஜுஹ்ரி அனடொலு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இது மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது, இது ஒரு ஆபத்தான முடிவு, இதனால் எகிப்து - பாலஸ்தினம் இடையே உறவில் விரிசல் ஏற்படும்.
நிலைமையே தலைகீழாகிவிட்டது எதிரியாக இருந்த இஸ்ரேலை நண்பனாக்கி, ஹமாசை கழட்டிவிட்டுள்ளது, இது பாலஸ்தின மக்களையே தீவிரவாத மக்களாக கருதியுள்ளது, இருப்பினும் இந்த தீர்ப்பால் ஹமாஸ்க்கு எந்த பாதிப்பும் கிடையாது.
கடந்த மாதம் ஹமாசின் ராணுவ பிரிவு அல்கஸ்ஸாமை தீவிரவாத குழு என்று கூறியது எகிப்து கோர்ட். எகிப்தின் சினாய் பகுதியில் நடக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு காசா வழியாக ஹமாஸ் தான் ஆயுதங்களை வழங்கி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளது கோர்ட்.
இந்த குற்றசாட்டிற்க்கு ஹமாஸ் இயக்க தலைவர் ஹனிபா முன்பே மறுப்பு தெரிவத்தார், நாங்கள் இதுப்போன்ற காரியங்களில் இடுபட எங்களுக்கு அவசியம் இல்லை என்று கூறினார், ஆனால் எகிப்து இதைப்பற்றி பொருட்படுத்தவில்லை.
குறிப்பு: சமிப காலமாக எகிப்து அதிபர் சிசிக்கு இஸ்ரேல் உதவி வருகிறது.
No comments:
Post a Comment