ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மோடி கூறியதற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சமீபத்தில் பொதுகூட்டம் ஒன்றில் 370 பிரிவின் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரியிருந்ததை தொடர்ந்து அப்பிரிவு சம்பந்தமாக சர்ச்சை வெடித்தது.
மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 370 பிரிவு குறித்து மோடியுடன் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் தாம் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ளார். மோடியை நோக்கி ஒமர் அப்துல்லா பகிரங்க விவாத அழைப்பு கொடுத்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment