Sunday, November 17, 2013

மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது: சங் பரிவார் அமைப்பு!

புது டெல்லி: அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உச்ச
நீதிமன்றத்தில் சங் பரிவார் அமைப்பு முன்னாள் நிர்வாகி மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி விசாரணை கைதியாக சிறையிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் நாசர் மதானி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

இந்நிலையில், பாரதீய சிந்தனை மையம் என்ற சங் பரிவார் அமைப்பு முன்னாள் நிர்வாகி டி.ஜி. மோகன்தாஸ், நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அம்மனுவில், "நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அது பாதர் அலவி மற்றும் பி பரமேஸ்வரன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். இவர்களுக்கு எதிராக நடந்த கொலை முயற்சி வழக்கில் நாசர் மதானி குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கினைக் காவல்துறை விசாரித்து வரும் நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்குவது கேரளாவில் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு உண்டாக்கும். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என கோரியுள்ளார்.

இம்மனுவும் மதானியின் ஜாமீன் மனுவும் ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசர் மதானிக்கு ஜாமீன் மனுவினை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப்போவதில்லை எனவும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், கேரளாவில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதனை உச்ச நீதிமன்றத்தில் மதானி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நாளில் அறிவிக்க இருப்பதாகவும் கேரள அரசு அறிவித்திருந்த நிலையில், மதானிக்கு எதிராக இப்புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment