"நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி தான்.ஆகவே தான் அவர் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று பேசிவருவது இயற்கைதான்"
என்று பேசியுள்ள நரேந்திர சிங் , " மற்றவர்களை கொல்லுகிற ஒருவர் எப்போதும் பயந்தே வாழ்கிறார். அதனால், நாம் கொல்லப்படுவோம் என்ற பயத்தில் எப்போதும் அவர் பாதுகாவலர்களுடனேயே சுற்றி வருகிறார்" என்று குறிப்பிட்டார்.விளம்பரத்திற்காகவே மோடி தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நரேந்திரசிங், பாட்னா குண்டுவெடிப்பில் பாரதிய ஜனதாவுக்குத் தொடர்பு இருக்கவே செய்கிறது என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment