பக்கங்கள்

Saturday, September 28, 2013

மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது!


முஸஃபர் நகர்: உ.பி. மாநிலம் முஸஃபர்நகர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ.) அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னர் இன்னொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சங்கீத் சோம் மீதும் என்.எஸ்.ஏ. போடப்பட்டது. இம்மாதம் 20-ஆம் தேதி லக்னோவில் வைத்து ராணா கைது செய்யப்பட்டார். சுரேஷ் ராணா, சங்கீத் சோம், பர்பேந்து சிங் ஆகிய 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேர் மீது நீதிமன்றம் ஜாமீன் இல்லாத வாரண்டைப் பிறப்பித்திருந்தது.

No comments:

Post a Comment