பக்கங்கள்

Saturday, September 28, 2013

ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினர்களை விடுவித்தது நீதிமன்றம்!


புதுடெல்லி: 2009-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்  கைது செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் உறுப்பினர்கள் எனக் கருதப்படும் இரண்டு நபர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்துள்ளது.
ஜாவேத் அஹ்மத் தந்த்ரா, ஆஷிக் அலீ பேட் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று கூறி கூடுதல் அமர்வு நீதிபதி அதுல்குமார் கார்க் விடுதலை செய்தார். இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் தரியா கஞ்சில் இருந்து இவ்விருவரையும் போலீஸ் கைது செய்தது. இவர்களிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றியதாக
போலீஸ் கூறியது. மேலும், பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்றும் ஜம்முவில் இருந்து திருடிய கார் மூலம் டெல்லிக்கு வந்தார்கள் என்றும் போலீஸ் கூறியது.

தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் படி இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அனைத்து குற்றங்களில் இருந்தும் இவ்விருவரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

No comments:

Post a Comment