பக்கங்கள்

Tuesday, July 2, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட வழக்கு:பாண்டேவின் மனு தள்ளுபடி!

அஹ்மதாபாத்:மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான குஜராத் மாநில கூடுதல் டி.ஜி.பி பி.பி.பாண்டேவின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்து உத்தரவிட்டது. தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்குமாறு பாண்டே மனுவில் கோரியிருந்தார். உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தலைமறைவாக இருக்கும் பாண்டேவின் மனுவை பரிசீலிக்க முடியாது என்று நீதிபதி ஹர்ஷதேவானி தெளிவுப்படுத்தினார்.

ஆனால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என்று சி.பி.ஐ. வக்கீல் வாதிட்டார்.‘போலி என்கவுண்டருக்கு அவர்தான் மூளையாக செயல்பட்டார். உண்மையில் ‘ராம்போ’போல் அவர் இந்த போலி என்கவுண்டரை நடத்தினார்’’ என்று அவர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாண்டேவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment